ADDED : பிப் 07, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;கோவை - பாலக்காடு இடையே, மதுக்கரை, எட்டிமடை, வாளையார் ரயில்வே ஸ்டேஷன்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி, பலியாகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
இதனை தவிர்க்க. தண்டவாளத்தின் கீழ் பாலம் அமைக்க, ரூ.11.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதல் பாலம், கடந்த இரு மாதங்களுக்கு முன், கட்டி முடிக்கப்பட்டது. இரண்டாவது பாலம், வாளையார் -- எட்டிமடை இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணியை, நேற்று பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி ஆய்வு செய்தார்.

