ADDED : செப் 06, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று முதல் மூன்று நாட்கள் மூடப்படுகிறது.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினசரி நான்கு முதல் ஐந்து ரயில்கள்களும், வார இறுதி நாட்களில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் ரயில்வே கேட்டில் இன்று, 7ம் தேதி முதல் 9 வரை, 3 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெறுவதால், இந்த வழி தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
எனவே, சொலவம்பாளையம், அரசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள் கொண்டம்பட்டி வழியாக மாற்று பாதையில் செல்ல, தெற்கு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
