ADDED : செப் 14, 2026 07:13 PM
பொள்ளாச்சி: பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே கேட்கள் மூடப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில் குஞ்சிபாளையம் ரயில்வே கேட், பராமரிப்பு பணிக்காக இன்று காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக சிங்காநல்லுார் – சீனிவாசபுரம், அம்பராம்பாளையம் – சிங்காநல்லுார் வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழைக்கொம்பு நாகூர் ரயில்வே கேட் பராமரிப்புக்காக வரும், 17ல் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது. சுப்பேகவுண்டன்புதுார் – வாழைக்கொம்பு, சக்தி சோயாஸ் – வாழைக்கொம்பு வழித்தடத்தை பயன்படுத்தலாம்.
வளந்தாயமரம் – பெரியபோது ரயில்வே கேட் பராமரிப்புக்காக வரும், 18ல், காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது. கணபதிபாளையம் – பெரியபோது வழித்தடத்தை பயன்படுத்தலாம்.
பொள்ளாச்சி – கோவிந்தாபுரம் ரயில்வே கேட் வரும், 19ல் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி முதல் மூடப்படுகிறது. கோவிந்தாபுரம் – பெரிய போது வழித்தடத்தை பயன்படுத்தலாம்.
பொள்ளாச்சி – ஆனைமலை ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக வரும், 20ல் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது. சுங்கம் – சுப்பேகவுண்டன்புதுார் மேம்பாலம், சுந்தராபுரம் ரோடு – ஆனைமலை வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். இத்தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
