ADDED : செப் 20, 2026 09:24 PM
கோவை: ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) தினத்தை முன்னிட்டு, கோவை ரயில்வே பாதுகாப்புப்படை வட்டத்தில் பயணிகள் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு, துாய்மை மற்றும் ரயில்வே பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. உதவி பாதுகாப்பு கமிஷனர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.
ஆர்.பி.எப்., வீரர்கள் ரயில் பயணிகளுடன் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அரங்கில் நடந்த கருத்தரங்கில், மோப்பநாய் பிரிவு நிபுணர் சவுந்தராஜன், ரயில்வே பாதுகாப்பில் நாய்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தண்டவாளங்களை கடப்பது, அத்துமீறி செல்வது, கல்வீசுவது, பொருட்களை வைப்பது, கால்நடைகளை மேய்ப்பது, குப்பை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, விளைவுகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
