/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதரில் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு; நடவடிக்கை எடுக்கணும்
/
புதரில் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு; நடவடிக்கை எடுக்கணும்
புதரில் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு; நடவடிக்கை எடுக்கணும்
புதரில் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு; நடவடிக்கை எடுக்கணும்
ADDED : ஜன 28, 2025 06:31 AM

ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் கட்டடம் அருகே ரோட்டின் ஓரத்தில் அதிகளவு குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசத்துவங்கி உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- - டேவிட், பொள்ளாச்சி.
நிழற்கூரையில் போஸ்டர்
நெகமம் அருகே உள்ள குருநல்லிபாளையம் பகுதியில் நிழற்கூரையில் அதிகளவு கட்சி மற்றும் விளம்பர போஸ்டர்களால் நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே, இங்கு போஸ்டர் ஒட்டப்படுவதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேஷ், நெகமம்.
புதரை அகற்றுங்க
பொள்ளாச்சி -- கோவை ரோட்டில், வடக்கிபாளையம் பிரிவு அருகே ரோட்டை செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால் இரவு நேர வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் செல்ல தடுமாறுகின்றனர். எனவே ரோட்டோர செடிகளை அகற்றம் செய்ய வேண்டும்.
- - பிரபு, பொள்ளாச்சி.
நிழற்கூரை அமைக்கணும்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில், நிழற்கூரை இல்லாததால், பயணியர் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி நின்று செல்கின்றனர். இதைத் தவிர்க்க இப்பகுதியில் நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பாலு, ஆச்சிபட்டி.
ரோட்டை விரிவாக்குங்க
வால்பாறையில் இருந்து மாணிக்கா எஸ்டேட் செல்லும் ரோடு குறுகலாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - விமலா, வால்பாறை.
பராமரிப்பு இல்லை
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே குடியிருப்பு உள்ளது. பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டி செடிகள் வளர்ந்து கிடக்கிறது. இவற்றை அகற்றி பராமரிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு சக்கர வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் பஸ்சுக்கு காத்திருக்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். பஸ் வரும் நேரத்தில் பார்க்கிங் பிரச்னையால் வாகனங்களுக்கு இடையில் சிக்கிக்கொள்கின்றனர்.
- ராதா, உடுமலை.
துார்வார வேண்டும்
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில் ரோட்டில் சாக்கடை கால்வாய் முழுவதும் கழிவுகள் நிறைந்துள்ளது. கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால் குடியிருப்புகளில் கழிவுநீர் வெளியேறுவதற்கு பிரச்னை ஏற்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், மிகுதியான கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது.
- செல்வகுமார், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, ராமசாமி நகர் நான்காவது வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. அப்பகுதியில் ரோடும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமலும், ரோட்டின் பள்ளங்களில் வாகனத்தை விட்டு தடுமாறி விழுகின்றனர். பொதுமக்கள் வெளியில் செல்வதற்கும் அச்சப்பட வேண்டியுள்ளது.
- கண்ணன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை பஸ் ஸ்டாண்டில், இரு சக்கர வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால், பஸ்கள் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர், உடுமலை.