sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குப்பை கொட்டும் இடமான ரயில்வே ஸ்டேஷன் ரோடு

/

 குப்பை கொட்டும் இடமான ரயில்வே ஸ்டேஷன் ரோடு

 குப்பை கொட்டும் இடமான ரயில்வே ஸ்டேஷன் ரோடு

 குப்பை கொட்டும் இடமான ரயில்வே ஸ்டேஷன் ரோடு


ADDED : ஜன 29, 2026 05:24 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு சொந்தமான இடத்தில், காலாவதியான குளிர்பான பாட்டில்களை கொட்டியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டது.

கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பின்பக்கம், மண்பாதை உள்ளது. இந்த ரோட்டில் விவசாயிகள் பலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த ரோட்டோரம் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, கோழி இறைச்சி கழிவு, காலி மது பாட்டில்கள் மற்றும் இதர குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது காலாவதியான குளிர்பானம் பாட்டில்கள் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரோட்டின் நடுவே ஏகமாக கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியே குப்பை கிடங்கு போன்று அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

எனவே, ரயில்வே நிர்வாகம் சார்பில் இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்து, ரோட்டை சீரமைக்க வேண்டும். இங்கு காலாவதியான குளிர்பானத்தை கொட்டிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குப்பை கொட்டுவதை தடுக்கவும், பாதுகாப்பு வசதிகளுக்காகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us