/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் மழை; இயல்பு நிலை பாதிப்பு
/
மேட்டுப்பாளையத்தில் மழை; இயல்பு நிலை பாதிப்பு
ADDED : அக் 24, 2024 11:34 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் நேற்று மதியம், கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் காலையிலிருந்து மதியம் வரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரில் மதியம், 1:30 மணிக்கு பெய்ய தொடங்கியது.
அதைத் தொடர்ந்து சிறுமுகை, காரமடையில் மழை பெய்தது. மேட்டுப்பாளையம் நகரில், 2:00 மணி வரை கனமழை பெய்தது.
அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதேபோன்று காரமடை, சிறுமுகையிலும் கனமழையை அடுத்து, சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.