UPDATED : நவ 13, 2026 07:31 PM
ADDED : நவ 13, 2026 07:28 PM
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினருமான ராகுல்நாத் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் ரவிதேஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் நடந்துவரும் மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2,167 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்களில், 2,038 கி.மீ., துார்வாரப்பட்டுள்ளன.
129.41 கி.மீ., பணிகள் நிலுவையில் உள்ளன. இதன் மூலம் 94.03 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல், 157.01 கி.மீ., நீளமுள்ள சிறு கால்வாய்களில், 148.19 கி.மீ., துார்வாரப்பட்டு, 94.38 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மழைநீர் தேங்குவது தொடர்பாக அக்., 18 முதல் 25ம் தேதி வரை ஐந்து மண்டலங்களில் 416 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர, மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், சுகாதாரம், பிற்படுத்தப்பட்டோர் நலன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் திட்டச் செயல்பாடுகள் மற்றும் நிலுவைப் பணிகள் குறித்து ராகுல்நாத் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
