/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளங்களில் மழைநீரை சேமிக்க வேண்டும்! பா.ஜ.வினர் மனு கொடுத்து வலியுறுத்தல்
/
குளங்களில் மழைநீரை சேமிக்க வேண்டும்! பா.ஜ.வினர் மனு கொடுத்து வலியுறுத்தல்
குளங்களில் மழைநீரை சேமிக்க வேண்டும்! பா.ஜ.வினர் மனு கொடுத்து வலியுறுத்தல்
குளங்களில் மழைநீரை சேமிக்க வேண்டும்! பா.ஜ.வினர் மனு கொடுத்து வலியுறுத்தல்
ADDED : செப் 01, 2025 10:14 PM
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி வடக்கு, தெற்கு வட்டார ஊராட்சிகளில் உள்ள குளங்களை சுத்தம் செய்து, மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்,' என, பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ. மனு கொடுத்து வலியுறுத்தியது.
பொள்ளாச்சி கிழக்கு பா.ஜ. ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு வருவாய் வட்டாரங்களில் உள்ள, 50க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில், நுாற்றுக்கணக்கான குளங்கள், ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் காலப்போக்கில் பாழடைந்து பாசன திறனை இழந்து, மண், புல், கழிவு மற்றும் கட்டுமான கழிவுகளால் நிரம்பி கிடக்கின்றன. இதனால் நீர் சேமிக்கும் திறன் குறைந்துள்ளது.
மழை காலத்தில் குளங்களில் தண்ணீரை தேங்கி நிறுத்த முடியாமல் பெரும்பாலான நீர் கடலுக்கு செல்கிறது. இதனால், கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக குறைகிறது. விவசாயிகள் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் வசதியும் குறைந்து மக்களின் அடிப்படை தேவைகளும் பாதிக்கப்படுகின்றன.
மழைநீரை முழுமையாக பயன்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மிகவும் அவசியமானதாகும். எனவே, வடக்கு, தெற்கு வட்டாரங்களில் உள்ள குளங்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை துார்வாரி மழைநீர் சேமிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். கரைகளை பலப்படுத்தி நீர் கசியாமல் பாதுகாக்க வேண்டும். பாசன கால்வாய்கள், குள இணைப்புகளை சீரமைக்க வேண்டும். குளங்களின் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து பசுமையாக பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.