ADDED : செப் 03, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கோவை, செப்.
3–
சர்வதேச பள்ளிகளின் மண்டல சங்கம்(ரெய்ஸ்) சார்பில் கோவை நேரு ஸ்டேடியத்தில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. 35 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 780 பேர் பங்கேற்றனர். மாணவர்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் புவன், நகுல் கிருஷ்ணன், செல்வ மகிழன் ஆகியோரும், நீளம் தாண்டுதலில் திரிதேவ், அனுாப் லால், விவான் பிரசாத் ஆகியோரும், உயரம் தாண்டுதலில் நழேந்திர சரவணன், ஸ்ரீமத் அனிஸ், ஆரவ் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
