/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜலட்சுமி, அல்வேர்னியா கூடைப்பந்தில் சாம்பியன்
/
ராஜலட்சுமி, அல்வேர்னியா கூடைப்பந்தில் சாம்பியன்
ADDED : ஜன 10, 2024 11:58 PM

கோவை : டெக்சிட்டி கூடைப்பந்து அறக்கட்டளை சார்பில், நடக்கும் மாவட்ட அளவிலான கூடைப்பந்து சிறுவர் பிரிவில், ராஜலட்சுமி மில்ஸ் மற்றும் சிறுமியர் பிரிவில், அல்வேர்னியா பள்ளிகள் முதலிடம் பிடித்தன.
டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில், '17வது ஸ்ரீ தேவராஜூலு நினைவு கோப்பைக்கான' ஆண்கள் கூடைப்பந்து போட்டி மற்றும் மாணவ, மாணவியருக்கான முதலாம் ஆண்டு, 'கோட் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கோப்பை' போட்டிகள், நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க மைதானத்தில் நடக்கிறது.
இதன் சிறுவர் பிரிவில், 12 அணிகள், சிறுமியர் பிரிவில் 10 மற்றும் ஆண்கள் பிரிவில் 25 அணிகள் பங்கேற்றன.
சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவு இறுதிப்போட்டிகள், நேற்று முன்தினம் மாலை பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் உள்ள, உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
சிறுவர் பிரிவில், ராஜலட்சுமி மில்ஸ் அணி முதலிடமும், ஒய்.எம்.சி.ஏ., அணி இரண்டாமிடமும், எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணி மூன்றாமிடமும் பிடித்தன. சிறுமியர் பிரிவில், அல்வேர்னியா முதலிடம், ஒய்.எம்.சி.ஏ., இரண்டாமிடம் மற்றும் எஸ்.வி.ஜி.வி., மூன்றாமிடம் பிடித்தன.
இதேபோல், நேற்று காலை நடந்த ஆண்கள் பிரிவு நாக் அவுட் சுற்றில், ஜெயபாரதி அணி 67 - 24 என்ற புள்ளிக்கணக்கில் பெர்க்ஸ் அணியையும், ஒய்.எம்.சி.ஏ., அணி 54 - 41 என்ற புள்ளிக்கணக்கில் விங்ஸ் அணியையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுப்போட்டிக்கு முன்னேறின.