தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'அவள் அவளாக இருக்க வேண்டும் என்பதே ராஜம் கிருஷ்ணன் பார்வை'

 'அவள் அவளாக இருக்க வேண்டும் என்பதே ராஜம் கிருஷ்ணன் பார்வை'

 'அவள் அவளாக இருக்க வேண்டும் என்பதே ராஜம் கிருஷ்ணன் பார்வை'


ADDED : மார் 09, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இலக்கியவெளி(கனடா) வாசகர் வட்டம் சார்பில், 'இலக்கியவெளியில் ராஜம் கிருஷ்ணன்' நுாற்றாண்டுச் சிறப்பிதழ் அறிமுக விழா நேற்று நடந்தது.

பீளமேடு, பாலன் நகர் எஸ்.கண்ணன் அரங்கில் நடந்த விழாவில், இலக்கிய பெருமன்ற துணை தலைவர் சுஜாதா தலைமை வகித்து பேசுகையில், ''ராஜம் கிருஷ்ணன் சிறுகதைகள் எல்லாம் பெண்கள் சமத்துவம், சுயசார்புடன், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

குடும்பத்தை சிதைக்காத பெண்ணியலை அவர் விரும்புகிறார். பெண்கள் சுயமரியாதையை இழக்காமல் இருக்க வேண்டும்; யாரும் கட்டுப்படுத்தக்கூடாது' என்ற விதத்தில் அவரது பார்வை இருக்கும். சுதந்திரமாகவும், அறிவுடனும் பெண்களை வளர்க்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறார். குடும்ப வன்முறையையும், ஆணாதிக்கத்தையும் எதிர்த்தார்,'' என்றார்.

இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் ரமணி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் தமிழ்துறை இணை பேராசிரியர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us