/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜமாரியம்மன் பூச்சாட்டு திருவிழா
/
ராஜமாரியம்மன் பூச்சாட்டு திருவிழா
ADDED : மே 12, 2025 12:19 AM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையம், ஒன்னி பாளையம்புதுார், கரிச்சிபாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளிப்பாளையம் செங்காளிபாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில், ராஜ மாரியம்மன் பூச்சாட்டு திருவிழா கடந்த, 28ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து, நித்திய பூஜை, கம்பம் சுற்றி விளையாடுதல், அம்மன் அழைப்பு, சக்தி கரகம் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று திங்கட்கிழமை காலை, 9:00 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜை, மாலை மாவிளக்கு, அக்னி கரகம் எடுத்தல், திருக்கம்பம் அகற்றுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை செவ்வாய்க்கிழமை எருது பிடித்து வருதல், தடி தட்டுதல், வாலி வாழ்த்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.