/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்; தபாலில் 'அன்பு' பரிமாற்றம்
/
ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்; தபாலில் 'அன்பு' பரிமாற்றம்
ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்; தபாலில் 'அன்பு' பரிமாற்றம்
ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்; தபாலில் 'அன்பு' பரிமாற்றம்
ADDED : ஜூலை 28, 2025 09:52 PM

கோவை; ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாட சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, வடமாநிலத்தில் வசிக்கும் தங்களின் சகோதரர்கள், சகோதரிகளுக்கு, தபால் வாயிலாக, ராக்கி கயிறு அனுப்பும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
சகோதர, சகோதரிகளுக்கு இடையே, அன்பு மற்றும் பாதுகாப்பின் புனிதமான பிணைப்பை கொண்டாடும் ஒரு பண்டிகை ரக் ஷா பந்தன். அன்பின் அடையாளமாக பரிசு வழங்குவதும் உண்டு.
உத்தரபிரதேசம், பஞ்சாப், டில்லி உட்பட வடமாநிலங்களில், பாரம்பரிய சடங்குகளுடன் ரக் ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
மேற்குவங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சமூக நல்லிணக்கம் வலியுறுத்தி, சகோதரர்களுக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்கும், அருகே வசிக்கும் வீட்டினருக்கும், மக்கள் ராக்கி கட்டி மகிழ்வர்.
அசாம் மற்றும் மேகாலயாவில், நண்பர்கள் மறும் உறவினர்களுக்கு இடையே பிணைப்பை வலுப்படுத்தவும், அவர்களுக்கு ராக்கி கயிறு கட்டவும், மக்கள் இந்த நாளை பயன்படுத்துகின்றனர். நடப்பாண்டு ஆக., 9ல் ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் பலர் வசிக்கின்றனர். பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில், இங்கிருந்து தபால் வாயிலாக, ராக்கி கயிறு அனுப்பும் நடவடிக்கையில், ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, தபால் நிலையங்களில், பதிவுத் தபால் மற்றும் விரைவுத் தபாலில் அனுப்பும் நடைமுறை துவங்கி விட்டது. வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் வசிக்கும் தங்களின் சகோதர, சகோதரிகளுக்கும், உறவினர்களுக்கும் ராக்கி கயிறு மற்றும் பரிசுப் பொருள் அனுப்பும் நடவடிக்கை துவங்கியுள்ளது.