ADDED : மார் 25, 2026 10:42 PM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்:அடுத்த மாதம் 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று பேரணி நடந்தது. கல்லூரி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புத்தூர் ரோடு, போளுவாம்பட்டி ரோடு, மாரியம்மன் கோவில், சந்தைப்பேட்டை வழியாக, கல்லூரி வளாகத்தில் பேரணி முடிந்தது. விழிப்புணர்வு பதாகை ஏந்தி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
