/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் வீடு தோறும் சென்று அழைப்பு
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் வீடு தோறும் சென்று அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிேஷகம் வீடு தோறும் சென்று அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிேஷகம் வீடு தோறும் சென்று அழைப்பு
ADDED : ஜன 08, 2024 11:11 PM

வால்பாறை;அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்துக்கு, குடும்பத்துடன் வரவேண்டும் எனக்கூறி, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில், ராமர் கோவில் மகாகும்பாபிேஷக விழா வரும், 22ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதனை தொடர்ந்து, ஹிந்து முன்னணி சார்பில், அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில், வீடு தோறும் நேரடியாக சென்று அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.
ஹிந்து முன்னணி சார்பில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி, குடும்பத்துடன் கும்பாபிேஷகத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தனர். வால்பாறை நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாவட்ட துணை செயலாளர் சேகர், நகர செயலாளர் சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.