/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் ரம்ஜான் தொழுகை
/
மேட்டுப்பாளையத்தில் ரம்ஜான் தொழுகை
ADDED : மார் 21, 2026 03:36 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த ரம்ஜான் தொழுகையில், ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்று, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேட்டுப்பாளையத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, 37 பள்ளிவாசல்களில் இருந்து, இஸ்லாமியர் ஊர்வலமாக, ஊட்டி சாலையில் உள்ள ஈத்கா பள்ளிவாசலுக்கு சென்றனர்.
அங்கு மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் கலிபுல்லா, ரம்ஜான் சிறப்பு தொழுகையை நிறைவேற்றினார். வேலூர் அரபிக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல் ஹமீது ரம்ஜான் தொழுகை குறித்து விளக்கினார்.
ஈத்கா பள்ளிவாசல் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், அருகே இருந்த கட்டடத்தின் மாடியிலும், ஊட்டி சாலையிலும், இஸ்லாமியர் விரிப்புகளை விரித்து ரம்ஜான் தொழுகையில் பங்கேற்றனர்.

