/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல்கலை ஹேண்ட்பால் ராமகிருஷ்ணா அணி வெற்றி
/
பல்கலை ஹேண்ட்பால் ராமகிருஷ்ணா அணி வெற்றி
ADDED : செப் 30, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; சரவணம்பட்டி அருகே உள்ள பி.பி.ஜி., பிசினஸ் ஸ்கூல் வளாகத்தில், அண்ணா பல்கலை 11வது மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடந்தது. ஏழு கல்லுாரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. போட்டிகள், 'நாக்- அவுட்' முறையில் நடந்தன.
இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி, குமரகுரு இன்ஜினியரிங் கல்லுாரி அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. பரிசளிப்பு விழாவில், பி.பி.ஜி., பிசினஸ் ஸ்கூல் இயக்குனர் வித்யா பாலசுப்பிரமணியம், சான்றிதழையும், கோப்பையையும் வழங்கினார்.