/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ராமகிருஷ்ணா அணி வீரர்
/
ஐந்து விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ராமகிருஷ்ணா அணி வீரர்
ஐந்து விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ராமகிருஷ்ணா அணி வீரர்
ஐந்து விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்த ராமகிருஷ்ணா அணி வீரர்
ADDED : அக் 06, 2025 12:13 AM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் முதலாவது டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், ஆர்.கே.எஸ். கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 215 ரன் எடுத்தனர். வீரர்கள் சுஜய், 85 ரன், ஹரி நிஷாந்த், 77 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் பொன்முரளி கிருஷ்ணன் மூன்று விக்கெட்வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய ஆர்.கே.எஸ். அணியினர், 28.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 120 ரன் எடுத்தனர். வீரர்சரவணன், 62 ரன் எடுத்தார். எதிரணி வீரர் கவுதம் தாமரை கண்ணன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
இரண்டாவது டிவிஷன் போட்டியில், ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியும், திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த ஆதித்யா கிரிக்கெட் கிளப் அணியினர், 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 215 ரன் எடுத்தனர். வீரர்கள் ஆதித்யா, 48 ரன், சுரேஷ் பாபு, 37 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்களான ராகவன் நான்கு விக்கெட், ஜீவன் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 164 ரன் மட்டுமே எடுத்தனர். வீரர் ராகவன், 36 ரன், சத்யன், 34 ரன், பிரனேஷ், 39 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ஆதித்யா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.