/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ரத சப்தமி; 'கோவிந்தா' கோஷத்துடன் தங்கத்தேரோட்டம்

ADDED : பிப் 05, 2025 12:19 AM

மேட்டுப்பாளையம்; ரத சப்தமியை முன்னிட்டு, தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் தங்கத்தேரோட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையத்தில், தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ரத சப்தமியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் சுப்ரபாதத்துடன் துவங்கின.
தொடர்ந்து, மலையப்பசாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தன. பின், மலையப்பசாமி சேஷ வாகனம், அன்னப்பட்சி வாகனம், அனுமந்த வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ரதசப்தமியின் முக்கிய நிகழ்வான தங்கத்தேரோட்டம் மதியம் நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தங்கத்தேரில் எழுந்தருளிய மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து, 'கோவிந்தா, கோவிந்தா' கோஷம் முழங்க, தங்கத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோவிலின் நான்கு மாட வீதிகளின் வழியாக தங்கத்தேர் வலம் வந்து இறுதியாக நிலையை அடைந்தது.