/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதுமை கிடைக்கலை ரேஷன் கார்டுதாரர் புகார்
/
கோதுமை கிடைக்கலை ரேஷன் கார்டுதாரர் புகார்
ADDED : ஆக 24, 2025 06:24 AM
கோவை : கோவை மாவட்டத்தில், 1,548 ரேஷன் கடைகள் உள்ளன. கார்டுதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், கோதுமை, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலானோருக்கு மூன்று மாதமாக கோதுமை கிடைக்கவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஒரு கார்டுக்கு அதிகபட்சம் இரண்டு கிலோ கோதுமை வழங்க வேண்டும். 1,500 கார்டுள்ள கடைக்கு, 800 கிலோ கோதுமை சப்ளை செய்யப்படுகிறது. அதனால், அனைவருக்கும் வழங்க முடிவதில்லை. முதலில் வரும் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது' என்றனர்.
ரேஷன் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மத்திய அரசால் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் கோதுமை அளவு குறைவாக இருப்பதால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொடுக்க முடியவில்லை. அரிசி குறைவாக வாங்கும் கார்டுதாரர்களுக்கு கோதுமை கொடுக்கப்படுகிறது' என்றனர்.