/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டில் திருத்தம்; நாளை நடக்கிறது முகாம்
/
ரேஷன் கார்டில் திருத்தம்; நாளை நடக்கிறது முகாம்
ADDED : டிச 12, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு குறைகேட்பு முகாம் நடத்தப்படும்.
அதன்படி, நாளை (டிச., 14) காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ரேஷன் கார்டு நகல், மொபைல் போன் எண் மாற்றம் மற்றும் குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம் தொடர்பாக மனுக்கள் கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.