தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெளியே ரேஷன் அரிசி 10 ரூபாய்க்கு விற்கின்றனர்! வாங்கி வடமாநிலத்தவர் தீர்க்கின்றனர் பசி

வெளியே ரேஷன் அரிசி 10 ரூபாய்க்கு விற்கின்றனர்! வாங்கி வடமாநிலத்தவர் தீர்க்கின்றனர் பசி

வெளியே ரேஷன் அரிசி 10 ரூபாய்க்கு விற்கின்றனர்! வாங்கி வடமாநிலத்தவர் தீர்க்கின்றனர் பசி

4


ADDED : செப் 09, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 06:30 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பதிவு இன்றி, கிலோ ரூ.10க்கு இலவச அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 1,401 ரேஷன் கடைகளும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் 56 கடைகளும் உள்ளன.

கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி உள்ளிட்ட பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரிசி, கோதுமை இலவசமாகவும், பிற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. அனைத்து கார்டுதாரர்களும் ஒவ்வொரு மாதமும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்குவதில்லை. இதனால் மீதமாகும் பொருட்கள் கணக்கில் காட்டாமல், வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

வட மாநிலத்தவர், உள்ளூரை சேர்ந்தவர்கள் கிலோ ரூ.6 முதல் ரூ.10க்கு (அரிசியின் தரம் பொருத்து) 10, 15, 20 கிலோ வரை அரிசி வாங்கி செல்கின்றனர். இந்த அரிசியை வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

ரேஷன் பொருள் வழங்கும் விவரம் ஆன்லைனில் பதிவாகிறது. பொருட்கள் பெறும்போது பயோமெட்ரிக் பதிவு செய்யப்படுகிறது. அதனால் அரிசி வாங்காத கார்டுதாரர்களின் ஒதுக்கீட்டை பயன்படுத்தி இந்த முறைகேடு நடக்கிறது. மதியம் 2:00 முதல் 2:30 மணிக்கு பிறகும், மாலை 5:00 மணிக்கு பிறகும் இவ்வாறு அரிசி விற்பனை நடப்பதாக, ஒரு ரேஷன் கடை ஊழியரே தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத அவர், 'ஒரு லோடு அரிசி வந்தால் இறக்கு கூலி உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. சில அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆட்சி மாறினாலும் இந்த துறை மட்டும் மாறவில்லை' என்றார்.

ரேஷன் கடைகளில், வழங்கல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். ஆன்லைன் பதிவுகள், பரிவர்த்தனைகள் மற்றும் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு, பில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள நிறுவனங்கள், பணியிடங்களிலும் ஆய்வு நடத்தி ரேஷன் அரிசி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவே, ஆன்லைன் கண்காணிப்பு நடைமுறை கொண்டு வரப்பட்டது. இப்போது இதிலும் ஓட்டை விழுந்துள்ளது தெரிகிறது. உயரதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததே காரணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us