/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரேஷன்கடை ஊழியர்களை எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுத்தக்கூடாது'
/
'ரேஷன்கடை ஊழியர்களை எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுத்தக்கூடாது'
'ரேஷன்கடை ஊழியர்களை எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுத்தக்கூடாது'
'ரேஷன்கடை ஊழியர்களை எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடுத்தக்கூடாது'
ADDED : நவ 24, 2025 06:30 AM
கோவை: தமிழக அரசு, வாக்காளர் கணக்கெடுப்பு திருத்தப்பணியில் ரேஷன் கடை பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜேந்தின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது:
வாக்காளர் கணக்கெடுப்பு திருத்தப்பணியில் ரேஷன் கடை பணியாளர்களை பயன் படுத்தும் நோ க்கில், நேற்று காலை 6:00 மணிக்கு அந்தந்த தாலுாகா அலுவலகங்களுக்கு வரவேண்டும் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ரேஷன் ஊழியர்கள், 20 முதல் 30 கிலோ மீட்டர் வரை வந்து செல்ல வேண்டி உள்ளது. விடுமுறை நாட்களில் பணிக்கு வர வேண்டி உள்ளது .
இந்த பணிக்கு ஊக்கத்தொகை எதுவும் தருவதாக சொல்லப்படவில்லை. ரேஷன் கடை பணியாளர்கள் அரசு பணியாளர்கள் அல்ல, அரசு அறிவித்த சுற்றறிக்கைகளில் ரேஷன்கடை பணியாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.
அரசு ஊழியர்களே இந்த பணியை செய்ய மறுத்து, போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், ரேஷன்கடை ஊழியர்களை பணிக்கு வர சொல்வது நியாயம் இல்லை. எனவே எஸ். ஐ.ஆர்., பணியில் ரேஷன்கடை பணியாளர்களை ஈடுபடத்த கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

