தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ திறப்பு விழா நடத்தியும் செயல்படாத ரேஷன் கடை

திறப்பு விழா நடத்தியும் செயல்படாத ரேஷன் கடை

திறப்பு விழா நடத்தியும் செயல்படாத ரேஷன் கடை


ADDED : ஆக 23, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்: மாருதி நகரில் திறப்பு விழா முடிந்து ஏழு மாதங்கள் ஆகியும், ரேஷன் கடை செயல்படுவதில்லை.

இடிகரை பேரூராட்சி, ஆறாவது வார்டு, மணியக்காரன்பாளையம், மாருதி நகரில், 20 லட்சம் மதிப்பில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் கோவை எம்.பி., கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். திறப்பு விழா நடந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இங்கு ரேஷன் கடை செயல்படுவதில்லை.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். 20 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்து, ஏழு மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அதிக தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. உடனடியாக புதிய கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us