/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு தேடி ரேஷன் வழங்கியும் செலவு தொகை கிடைக்கலை ரேஷன்கடை பணியாளர் சங்கம் கோரிக்கை

ADDED : அக் 06, 2025 11:30 PM
கோவை;வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டுதாரர்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்துக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும், 'தாயுமானவர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 85 ஆயிரத்து, 171 கார்டுதாரர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டுறவுத்துறை மூலம் 1,487 ரேஷன் கடைகளில், 1,191 குழுக்கள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் பயனாளிகள் வீடுகளுக்குச் சென்று பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கார்டுக்கு 40 ரூபாய், ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக 200 ரூபாய், வண்டி வாடகை 1,800 ரூபாய் வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மூன்று மாதங்களாகியும், இதுவரை இதற்கான செலவு தொகை வழங்கப்படவில்லை. சில கூட்டுறவு சங்கங்கள், வாகன வாடகை மட்டும் வழங்கி உள்ளன. அரசு அறிவித்தபடி, ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவு தொகையை வழங்க, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''தாயுமானவர் திட்டத்தை, ரேஷன் ஊழியர்கள் மூன்று மாதமாக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு கொடுப்பதாகச் சொன்ன தொகை, இன்னும் வழங்கப்படவில்லை. பல கடைகளில் வாகன வாடகையையும் ஊழியர்களே கொடுத்து வருகின்றனர். இத்திட்டத்துக்கென அறிவித்த ஊக்கத்தொகை மற்றும் செலவு தொகையை, உடனே விடுவிக்க வேண்டும்,'' என்றார்.