/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளின் பிடியில் ரேஷன் கடைகள்; கன்டெய்னர் கடை அமைக்க கோரிக்கை
/
யானைகளின் பிடியில் ரேஷன் கடைகள்; கன்டெய்னர் கடை அமைக்க கோரிக்கை
யானைகளின் பிடியில் ரேஷன் கடைகள்; கன்டெய்னர் கடை அமைக்க கோரிக்கை
யானைகளின் பிடியில் ரேஷன் கடைகள்; கன்டெய்னர் கடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 12, 2025 11:03 PM
வால்பாறை; வால்பாறையில், யானைகளிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, கன்டெய்னர் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில், மொத்தம் 16,520 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 47 ரேஷன் கடைகளில், 7 ரேஷன் கடையை தவிர மீதமுள்ள அனைத்தும் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளன.
எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை யானைகள் இரவு நேரங்களில் இடித்து சேதப்படுத்துவதால், பல லட்சம் மதிப்பிலான ரேஷன் பொருட்கள் சேதமடைவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள தேயிலை எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளது. இவை, இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதி அருகே உள்ள ரேஷன் கடையை சேதப்படுத்தி வருகிறது.
இதனால், அந்தப்பகுதியில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தையும் கன்டெய்னர் கடைகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. யானைகளால் ரேஷன் பொருட்கள் சேதமாவதை தவிர்க்க, முதல் கட்டமாக முடீஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள தாய்முடி, முத்துமுடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த ரேஷன் கடைகள் கன்டெய்னர் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. பிற கடைகளும் கன்டெய்னர் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.