/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்! குடிமைப்பொருள் வழங்கல் எஸ்.பி., அறிவுரை
/
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்! குடிமைப்பொருள் வழங்கல் எஸ்.பி., அறிவுரை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்! குடிமைப்பொருள் வழங்கல் எஸ்.பி., அறிவுரை
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்! குடிமைப்பொருள் வழங்கல் எஸ்.பி., அறிவுரை
ADDED : நவ 20, 2024 10:28 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மேற்கு மண்டல எஸ்.பி., ஆய்வு செய்தார்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கோவை மேற்கு மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன் நேற்று, பொள்ளாச்சியில் ஆய்வு மேற்கொண்டார். முதலில், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல்கள் போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கோவை சரகம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி., மாரிமுத்து, வால்பாறை டி.எஸ்.பி., ஸ்ரீநிதி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, எஸ்.பி., அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாநில எல்லை சோதனை சாவடிகளை குறிப்பிட்டும், அதன் வழியாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத ரோடுகள் வாயிலாகவும்; ஆள் நடமாட்டம் உள்ள ரோட்டில் வாகனங்கள் வாயிலாகவும் ரேஷன் அரிசி கடத்துபவர்களை கண்டறிய வேண்டும்.
அதற்கான தகவலை கண்டறிய தக்க தகவலாளிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். சந்தேகத்துக்கு உண்டான வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி சோதனை செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து 'புட்செல்' போலீசாரும் வாகன தணிக்கை மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும், என, அறிவுறுத்தினார்.
அதன்பின், பொள்ளாச்சி, நல்லுாரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ரேஷன் அரிசி கடத்தல் நடவடிக்கைகள் குறித்தும், மாநில எல்லை சோதனைச்சாவடிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
மாவட்ட, மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து, அவ்வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்து, ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என, எஸ்.பி., தெரிவித்தார்.
தமிழக - கேரளா எல்லையான கோபாலபுரம், மீனாட்சிபுரம், செமணாம்பதி ஆகிய சோதனைச்சாவடிகளிலும், போலீஸ் சோதனை சாவடிகள் இல்லாத ரோடுகளான தாவளம் பிரிவு, கிழவன்புதுார், நெடும்பாறை ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு போலீசாரிடம், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.