/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தட்டி துாக்கிய' ரத்தினம் அணி வீரர்கள்; ஆண்கள் கபடி போட்டியில் ஆக்ரோஷம்

ADDED : செப் 30, 2024 11:44 PM

கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(சி-மண்டலம்), ஆண்களுக்கான கபடி போட்டி இரு நாட்கள் நடந்தன. இதில், 22 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில், ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியும், ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. துவக்கம் முதலே புள்ளிகளை குவித்த ரத்தினம் கல்லுாரி வீரர்கள், 50-28 என்ற புள்ளிக்கணக்கில், ஸ்ரீ ராமு கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தனர்.
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, 28-20 என்ற புள்ளி கணக்கில் டெக்ஸ்சிட்டி கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஏ.ஜே.கே., கல்வி நிறுவனங்களின் செயலாளர் அஜித்குமார் லால்மோகன் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.