/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீண்டும் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி; மறியல் செய்த விவசாயிகள் கைது
/
மீண்டும் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி; மறியல் செய்த விவசாயிகள் கைது
மீண்டும் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி; மறியல் செய்த விவசாயிகள் கைது
மீண்டும் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி; மறியல் செய்த விவசாயிகள் கைது
ADDED : நவ 18, 2024 09:41 PM

சூலுார் ; விளை நிலங்களில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியதால், ஆவேசமடைந்த விவசாயிகள், சூலுார், திருச்சி ரோட்டில் நேற்று மறியல் செய்ததால், கைது செய்யப்பட்டனர்.
பாரத் பெட்ரொலியம் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம், இருகூரில் இருந்து பெங்களுரூ மாநிலம் தேவனஹந்தி வரை பெட்ரோல் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம்,குழாய்கள் பதிக்கும் பணியை துவக்கியது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், போலீஸ் பாதுகாப்புடன் பணி துவங்கியது. அதை எதிர்த்து விவசாயிகள், சூலுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் கைதாகினர்.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்த விவசாயிகள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் குழாய் பதிக்கும் பணி துவங்கியது. இதையறிந்து ஆவேசமடைந்த விவசாயிகள் கணேசன், ரவிக்குமார் தலைமையில் சூலுார் திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்த, 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.