/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பில்லாத நுாலகம் வாசகர்கள் கடும் அதிருப்தி
/
பாதுகாப்பில்லாத நுாலகம் வாசகர்கள் கடும் அதிருப்தி
ADDED : பிப் 20, 2025 11:23 PM
வால்பாறை; வால்பாறையில், பாதுகாப்பில்லாத நுாலகத்திற்குள் செல்ல வாசகர்கள் அச்சப்படுகின்றனர்.
வால்பாறை நகரில் அமைந்துள்ள நுாலகத்துக்கு, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாசகர்கள் அதிக அளவில் நாள் தோறும் சென்று வருகின்றனர். இது தவிர, பல்வேறு போட்டித்தேர்வுகளுக்காக படிக்கும் மாணவர்களும் வருகின்றனர்.
இந்நிலையில், நுாலத்தை சுற்றிலும் ஆபத்தான நிலையில் மரம் இருப்பதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் வாசகர்கள் நுாலகத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
வாசகர்கள் கூறியதாவது:
வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பாக உள்ள நுாலகத்தில், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும், என, கடந்த, 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை மனு கொடுத்தும் மரத்தை ஆபத்தான வெட்டவில்லை. இதனால், மழை காலங்களில் மரம் நுாலகத்தின் மேல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே போல், நுாலத்தின் முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளதால், நுாலகம் இருக்கும் இடம் தெரியவில்லை. வாசகர்கள் அமைதியான முறையில் புத்தங்களை படிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.