/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட ஆலோசனை
/
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட ஆலோசனை
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட ஆலோசனை
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்: தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட ஆலோசனை
ADDED : அக் 30, 2025 12:12 AM
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இங்கு வியாழன் தோறும் பிரத்யேகமாக பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் சிலர் அறிகுறி இருந்தும், தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு இன்றி புற்றுநோய் பாதிக்கப்பட்ட பின்னர் வருவது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
மாநில அளவில் மலக்குடல், பெருங்குடல் பாதிப்பு அதிகம் ஏற்படும் மாவட்டங்களில் கோவை இரண்டாமிடத்தில் இருக்கிறது. 2021 புள்ளி விபரங்கள் படி, கோவையில், 5,118 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில், ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் முதல் இடத்திலும், பெண்களுக்கு 5ம் இடத்திலும் உள்ளது.
மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பொறுத் தவரை பிற நோய்கள் போல் இல்லாமல் அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாது என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தியேட்டர்களில் திரையிட குறும்படம் தயாரித்துள்ளோம். காரணமற்ற எடை இழப்பு, நாள்பட்ட வயிறு வலி, மிகுதியான சோர்வு, நாள்பட்ட வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல், வழக்கமாக மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோருக்கு ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது. அறிகுறி இருந்தால், பரிசோதிப்பது, நோய் உறுதி செய்தால் சிகிச்சை எடுப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்கு செல்வோர் விடுபடுகின்றனர். அவர்களையும் கண்காணித்து சிகிச்சை எடுப்பதை உறுதி செய்ய ஆலோசித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

