/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பு ஊசி வண்டு பிடிக்க பயிற்சி
/
சிவப்பு ஊசி வண்டு பிடிக்க பயிற்சி
ADDED : ஜன 31, 2026 05:06 AM
காரமடை: வேளாண்மை பல்கலைக்கழக நான்காம் ஆண்டு மாணவிகள், மாணவ ஊரக வேளாண் பணி அனுபவம் தொடர்பாக மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்தனர். தென்னையில் சிவப்பு ஊசி வண்டு தாக்குதல் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இதை தடுப்பு மருதூர் பகுதியில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், இந்த வகை வண்டுகள், தென்னையின் அடிப்பகுதியில் துளையிட்டு, மரத்தின் உள்பகுதியில் சென்று, மரத்தை நாசம் செய்யும். இதை பிடித்து அளிக்க 'பக்கெட் டிராப்' முறையை பயன்படுத்தலாம். அதாவது சிவப்பு கூண் வண்டு கவர்ச்சி பொறி. இதற்கு ஒரு சிறய அளவிலான பாக்கெட் போதும். அதன் வெளிப்பகுதி கடினமாக வண்டுகள் பிடித்து ஏறும் வகையில் இருக்க வேண்டும்.
பக்கெட்டின் மூடிப்பகுதியில் வண்டுகளை கவரும், ஜெல்லியை கட்டி தொங்கவிட வேண்டும். அடிப்பகுதியில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டும்.
பக்கெட் மூடிக்கும், மூடும் பகுதிக்கு இடையில் வண்டுகள் உள்ளே செல்லும் மாறு ஓட்டை இருக்க வேண்டும். இந்த கவர்ச்சி பொறியில் வண்டுகள் சிக்கிவிடும், என்றனர்.

