/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிக்கு பஸ் இயக்க மறுப்பு
/
பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிக்கு பஸ் இயக்க மறுப்பு
பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிக்கு பஸ் இயக்க மறுப்பு
பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதிக்கு பஸ் இயக்க மறுப்பு
ADDED : செப் 02, 2025 11:04 PM

கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரை அடுத்த கெம்பனுாருக்கு, நாளொன்றுக்கு, 17 முறை அரசு பஸ் சென்று வருகிறது. ஆனால், 500 மீட்டர் துாரத்தில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் அண்ணா நகருக்கு, 7 முறை வந்து செல்கிறது. 21ம் எண் கொண்ட பஸ் ஒரு முறை கூட அண்ணா நகருக்கு சென்று திரும்புவதில்லை. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், கல்வி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், 'தீண்டாமை காரணமாக, சமூகத்தில் ஒரு பகுதி மக்களுக்கு பஸ் வசதி மறுக்கப்படுகிறது. கெம்பனுார் செல்லும் அனைத்து பஸ்களும் அண்ணா நகர் வரை சென்று திரும்ப வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.