/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஓட்டுநர்களுக்கு பதிவுச்சான்று முக்கியம்'
/
'ஓட்டுநர்களுக்கு பதிவுச்சான்று முக்கியம்'
ADDED : ஏப் 21, 2025 09:08 PM
மேட்டுப்பாளையம்; தனியார் நிறுவன ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவுச்சான்று பெறவில்லை என்றால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள், லாரி சர்வீஸ், தனியார் மக்கள் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் விதியின் கீழ், பதிவு செய்து, பதிவுச்சான்று பெற வேண்டும். மேலும் இரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். பதிவுச்சான்று பெறாமல் வாகனங்களை இயக்கினால், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின்கீழ் அது தவறு. பதிவுச்சான்று பெறாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பான் கார்டு, ஆதார் கார்டு, இ.பி., கார்டு, ஜி.எஸ்.டி., போன்ற ஆவணங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவுச்சான்று பெறலாம்.
தனியார் நிறுவனங்களில் இதுதொடர்பாக ஆய்வுக்கு செல்லும் போது, அந்நிறுவன ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பதிவுச்சான்று பெறவில்லை என்றால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.