/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.கோபாலபுரத்தில் ரேக்ளா போட்டி
/
சி.கோபாலபுரத்தில் ரேக்ளா போட்டி
ADDED : ஜன 17, 2025 11:50 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சி.கோபாலபுரத்தில், ரேக்ளா போட்டி, ரத்ததான முகாம் நடந்தது.
தமிழர் கலாசார அறக்கட்டளை, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., பொள்ளாச்சி தாலுகா சுற்றுச்சூழல் பாதுகாப்பு சபை சார்பில், 11ம் ஆண்டு ரேக்ளா போட்டி, ரத்ததான முகாம் நடந்தது.
முகாமினை ஆராதனா மருத்துவமனை டாக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். அதில், 175 பேர் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து, 1,000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடந்த ரேக்ளா போட்டியை, தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் துவக்கி வைத்தார். திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் மருதவேல், தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.