தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தயார் நிலையில் நிவாரண முகாம்; கமிஷனர் உத்தரவு

தயார் நிலையில் நிவாரண முகாம்; கமிஷனர் உத்தரவு

தயார் நிலையில் நிவாரண முகாம்; கமிஷனர் உத்தரவு


ADDED : அக் 19, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.

அப்போது, ‘‘ மழை சமயத்தில் அந்தந்த உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். வாகனங்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கினால் தாமதமின்றி அகற்ற வேண்டும். அதற்கான இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார், மரம் வெட்டும் இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும்.

தெரு விளக்குகள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். மழைநீர் வடிகால்களை துார்வாரி தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தங்கும் அவசரகால நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும்,’’ என, மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தினார்.

துணை கமிஷனர்கள் குமரேசன், சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us