/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நிவாரண தொகை வினியோகம்
/
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நிவாரண தொகை வினியோகம்
ADDED : ஆக 20, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், ஒன்பதுகுற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள்சிறை விதித்துகோவை மகளிர் கோர்ட் மே,13 ல் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு,85 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீட்டு தொகைபெற, பாதிக்கப்பட்ட பெண்கள், கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு,கோர்ட் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட நிவாரண தொகை,ஏழு பெண்களின்வங்கி கணக்கில்,நேற்று செலுத்தப்பட்டது.