/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன்கரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மீன்கரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : செப் 25, 2024 08:42 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், 'பொக்லைன்' வாயிலாக, அகற்றப்பட்டன.
பொள்ளாச்சி பகுதியில், சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தபால் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
தொடர்ந்து, மீன்கரை ரோட்டில் உள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. 'பொக்லைன்' உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. இதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி தபால் அலுவலகம் முதல், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தனியார் பள்ளி வரையிலும், பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், திருவள்ளுவர் திடல் மற்றும் மார்க்கெட் ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக மீன்கரை ரோட்டில் மோதிராபுரம் பிரிவு அருகே நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த, 23ம் தேதி நகர அளவையாளர் வாயிலாக நெடுஞ்சாலைத்துறை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இவ்வாறு, கூறினர்.