/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
/
சிறுமுகையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
ADDED : நவ 13, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-சத்தி சாலையில் சிறுமுகை நால்ரோடு மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார்கள் வந்தன.
புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட பிரிவு மாநில நெடுஞ்சாலை துறையினர், நேற்று முன் தினம் மற்றும் நேற்று தொடர்ந்து 2வது நாளாக, சிறுமுகை-சத்தி சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். பொக்லைன் இயந்திர உதவியுடன், சாலையின் இருபுறங்களிலும் உள்ள கடைகளின் முன்பகுதிகள்,ஷீட்கள் போன்றவைகள் அகற்றப்பட்டன.--

