/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றம் 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : மே 18, 2025 10:38 PM

கிணத்துக்கடவு,; 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மேம்பாலத்தின் கீழுள்ள மையத்தடுப்பில் இருக்கும் செடி, கொடிகளை அகற்றினர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. உள்ளூர் மக்களும், கிணத்துக்கடவு வழியாக கிராமங்களுக்கு செல்வோரும், சர்வீஸ் ரோடு வழியாகவே பயணிக்கின்றனர்.
இதில், மேம்பாலத்தின் கீழ், சென்டர் மீடியன் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், செடிகள் நடவு செய்யப்பட்டு, அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
சென்டர் மீடியனில் உள்ள செடி, கொடிகள் வளர்ந்து சர்வீஸ் ரோட்டிற்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
சில இடங்களில் உள்ள செடியின் கிளைகள் முள்ளுடன் காணப்பட்டது. இதனால், பைக்கில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது முட்கள் உரசி காயம் ஏற்பட்டது. இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மையத்தடுப்பில் வளர்ந்திருந்த செடிகளை அகற்றினர்.