/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர பலகைகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை கூட்டத்தில் வலியுறுத்தல்
/
விளம்பர பலகைகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை கூட்டத்தில் வலியுறுத்தல்
விளம்பர பலகைகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை கூட்டத்தில் வலியுறுத்தல்
விளம்பர பலகைகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : டிச 10, 2025 07:56 AM

கோவை: நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கோவை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்தது.
கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது:
கோவையில் உள்ள சாலைகளில் குழிகள் அதிகமாக காணப்படுகின்றன. உயிர் பலி ஏற்பட்ட பின், அவற்றை சீரமைப்பதற்கு பதிலாக, முதலில் எங்கெங்கு இருக்கிறது என அடையாளம் கண்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும்.
மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும். சிட்ரா முதல் காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் ரோட்டை நான்கு வழியாக்க 2017ல், 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாகியும் ரோடு விரிவாக்கம் செய்யவில்லை. சிங்காநல்லுார் - ஹோப் காலேஜ் ரோடு, சிட்ரா - காளப்பட்டி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
கிராஸ்கட் ரோடு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. அதன் இருபுறமும் மாநகராட்சியால் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் எங்கெங்கு குழிகள் இருக்கின்றன என பட்டியலிட்டு, அவற்றை விரைந்து செப்பனிடவும், போக்குவரத்து இடையூறாகவும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றவும் கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
லாலி ரோடு மேம்பாலத்துக்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் இறுதி செய்ய உத்தரவிட்டார்.
கூட்டத்தில், கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் ஜெயராமன், மேட்டுப்பாளையம் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த தினகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

