sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : பிப் 16, 2026 05:53 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்தல் பணி ஒதுக்கறதுல 'அரசியல்' ஆசிரியர்கள பகைச்சுட்டா அவ்வோளதான்! வால்பாறை தாலுகா ஆபீசில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணி ஒதுக்கீடு செய்திருக்காங்க தெரியுமானு, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்கள் பேச்சை கவனித்தேன்.

வால்பாறை சட்டசபை மேல் தொகுதியில, ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீட்டில் அதிகாரிக ஒருதலைபட்சமா செயல்படுறாங்க. சீனியர் ஆசிரியர்கள, ஜூனியர் ஆசிரியர்களுக்கு கீழ பணியில அமர்த்தறாங்களாம். இதனால ஆசிரியர்கள் மனஉளைச்சல்ல இருக்காங்க.

தேர்தல் பணியில கூட ஆளும்கட்சிக்கு, அதிகாரிகள் ஆதரவாக செயல்படறாங்கனு, ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட அமைப்புக்களும், அ.தி.மு.க.,வினரும் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியிருக்காங்க.

ஆனா, அதிகாரிக நாங்க தகுதியின் அடிப்படையில் தான் ஆசிரியர்கள தேர்தல் பணியில அமர்த்தியிருக்கோம். இதில் எந்தவித அரசியல் காரணமும் இல்லைனு தேர்தல் கமிஷனுக்கு சொல்லியிருக்காங்க.

எது எப்படியோ, தேர்தல் நடக்கிறதுக்கு முன்னாடி, உயர்அதிகாரிகள் ஆசிரியர்களின் புகார் குறித்து நேரில் ஆய்வு செய்து, தகுதி அடிப்படையில் தேர்தல் பணி ஒதுக்கினா நல்லது. இல்லைனா, ஓட்டு மிஷின் கூட வேலை செய்யாம போயிடும்னு பேசிக்கிட்டாங்க.

டாஸ்மாக் பார்ல சில்லிங் விற்பனையோடபுகையிலை பொருட்களும் விற்குறாங்க பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். டாஸ்மாக் பார்ல எல்லாமே கிடைக்குதுனு நண்பர் பேச ஆரம்பித்தார்.

பொள்ளாச்சியில டாஸ்மாக் மதுக்கடை திறக்காத நேரத்துல, 'பார்'ல, 'சில்லிங்' விற்பனை களை கட்டுது. இப்ப, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் 'பார்'ல விற்கறாங்க. கோட்டூர் ரோட்டு இருக்கற 'பார்'ல புகையிலை பொருள் விற்கறாங்கனு புகார் வந்ததும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாங்க.

இப்ப, நகரம் மற்றும் ஒரு சில 'பார்'கள்ல சரக்கோட, புகையிலை பொருளும் விற்கறாங்க. மார்க்கெட் ரோட்டுல இருக்கற டாஸ்மாக் 'பார்'ல, புகையிலை பொருள் விற்கறாங்கனு போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்காங்க.

'பார்'க்கு வந்த போலீஸ்காரங்க, புகையிலை பொருட்கள் விற்கறது வெளியில இருக்கறவங்களுக்கு தெரியுது. ரெண்டு நாளைக்கு விற்பனைய நிறுத்துங்கனு சொல்லியிருக்காங்க.

'சன்மானம்' வாங்கற போலீஸ்காரங்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு, 'பார்'காரங்களும் இரண்டு நாள் விற்பனைய நிறுத்திட்டு, இப்ப மீண்டும் விற்க துவங்கிட்டாங்க. போலீஸ்காரங்க, 'சில்லிங்' விற்கறதுக்கு மட்டுமில்ல, புகையிலை பொருள் விற்கறவங்க கிட்டவும் மாமூல் வசூலிக்கறது தெரியதுனு, சொன்னார்.

டாஸ்மாக் ஊழியர்க கிட்ட பணம் பறிக்கும்மொட்டை பெட்டிசன் 'அன்பானவர்' கிணத்துக்கடவு பக்கத்துல இருக்கிற கோவில்பாளையம் பஸ் ஸ்டாப்புக்கு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஒரு நபரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோ வேலையை பத்தி புலம்ப ஆரம்பித்தார். என்னன்னு விசாரிச்சேன்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில இருக்குற அத்தனை டாஸ்மாக் கடையும், 'அன்பான' ஜூனியர் அசிஸ்டன்ட் கைக்குள்ள இருக்கு. இதனால இவரு பொள்ளாச்சியில 'நம்ம தான் டாப்'னு நெனச்சுக்கிட்டு இருக்காரு.

பொள்ளாச்சி பகுதியில இருக்குற சூப்பர்வைசர்கள கைக்குள்ள போட்டுகிட்டு, பல டாஸ்மாக் கடைகள்ல இருக்குற சேல்ஸ்மேன்கள் மூலமா அதிக காசு பார்க்குறாரு. அவர எதிர்த்து பேசினாலும், பகைச்சிக்கிட்டாலும் உடனே வேற கடைக்கு டிரான்ஸ்பர் பண்ணுறதுக்கு வெளி ஆட்கள வச்சு, மேல் இடத்துக்கு மொட்ட பெட்டிசன் போட வைக்கறாரு.

கொஞ்ச நாள் முன்னாடி, ஆனைமலை பகுதியில இருக்கற ஒரு டாஸ்மாக் கடையில விற்பனையாளர மாத்திட்டு, ரிட்டயர்டு ஆனா ஒருவரை வேலைக்கு வச்சிருக்காங்க. இதனால, வேறு வழி இல்லாம மொட்ட பெட்டிசன் ஐடியாவை கையில் எடுத்துட்டு, பிளான் பண்ணி வேலை செய்யறாரு. அவருக்கு ஒத்து ஊதினா, இப்ப வேலை செய்ற கடையில இருக்கலாம். இல்லைனா டிரான்ஸ்பர் தான், அப்படின்னு புலம்பிட்டு கிளம்பினார்.

தேர்தல் பணியில அ.தி.மு.க., வேகம்ஆனா, கூட்டணி கட்சிகள மறந்துட்டாங்க குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், வெயிலுக்கு மரத்தடியில் ஒதுங்கிய போது, அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிக்காக சென்று திரும்பியவர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...

தேர்தல், கூட்டணி எல்லாம் முடிவாகறதுக்கு முன்பே, நம்ம தொகுதில அ.தி.மு.க.,காரங்க, தேர்தல் வேலைய ஆரம்பிச்சு ஸ்பீடா போறாங்க. கிராமத்துல, தங்கள் கட்சி ஓட்டுகள மட்டும் குறி வைச்சு முதற்கட்டமாக, டோக்கன் கொடுத்து, ஒரு குடை, ஹாட் பாக்ஸ், வாட்டர் பாட்டில்னு வாரி வழங்கிட்டு இருக்காங்க.

ஆனா, கூட்டணி கட்சிக்காரங்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கும் அ.தி.மு.க., தரப்புல முறையா தகவல் சொல்றது இல்லை. எல்லா கிராமத்திலும், கூட்டணி கட்சிக்காரங்களுக்குன்னு தனியா ஓட்டு வங்கி இருக்கும். அவங்களுக்கும் பிரசாரம் மற்றும் இதர வினியோகத்துக்கும் தகவல் கொடுத்தா நல்லா இருக்கும்.

அதை விட்டுட்டு, அ.தி.மு.க.,காரங்க மட்டும் தனிச்சையாக செயல்படுறாங்க. இப்படியே போச்சுனா, தேர்தல் பணி தீவிரமாகும் போது, கூட்டணி கட்சிக்காரங்க சத்தமில்லாம 'ஆப்' ஆயிடுவாங்க.

அட அவங்கங்க, கட்சி பதவிய தக்க வைச்சுக்க, இத்தனை வருஷம் கழிச்சு கிராமம் கிராமமா போய் மக்களை சந்திக்கறாங்க. இந்த நேரத்துல கூட்டணி கட்சிக்காரங்கள மறந்தறறாங்க போலிருக்குனு பேசிக்கிட்டாங்க.

மின்கேபிள்கள் திருடுறாங்க; போலீஸ் கண்டுக்க மாட்டீங்கறாங்க!

உடுமலை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல சோகமாக நின்றிருந்த விவசாயிக கிட்ட என்ன பிரச்னைக்கு வந்திருக்கீங்கனு விசாரிச்சேன். அவங்க சொன்னதில் இருந்து... உடுமலை பகுதியில, விவசாய கிணறு, போர்வெல்ல இருக்கற பல லட்சம் ரூபா மதிப்புள்ள மின் கேபிள்கள் தொடர்ந்து திருட்டு போயிட்டு இருக்கு. உடுமலை, தளி, அமராவதி போலீஸ் ஸ்டேஷன்களில், விவசாயிகள் புகார் அளித்தாலும், போலீசார் புகார வாங்காம இழுத்தடிக்கறாங்க. போன வாரம் மானுப்பட்டி பகுதியில கேபிள் திருட்டில் ஈடுபட்ட இருவரை விவசாயிகளே பிடிச்சு அமராவதி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தாங்க. ஆனா, போலீசார் வரல. அவங்கள தென்னை மரத்தில் கட்டி வச்சு அடிச்ச வீடியோ வெளியாகி பரபரப்பாயிச்சு. அதுக்கப்பறம் போலீசார் களத்தில் இறங்கி, திருடர்கள் இருவரை திருட்டு வழக்கிலும், அவங்கள தாக்கிய விவசாயிக மீதும் வழக்கும் போட்டாங்க. இப்ப, ஒரு தரப்பு வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கணும் என கூறியும், மற்றொரு தரப்பு, போலீஸ்காரங்க செயல்பட்டிருந்தா எங்களுக்கு எதற்கு இந்த வேலை. இப்ப, எங்க மீதும் வழக்கு போட்டிருக்காங்கனு அதிருப்தியில் இருக்காங்க. ஆனா, திருட்டு கேபிள் வாங்கியவங்க மீது வழக்கு பதிவு செய்தாலும், அவங்க பெயர் சேர்க்காம, கைது செய்யாம இருக்க, பெரும் தொகை வழங்க வேண்டும்னு, கட்டபஞ்சாயத்து கோஷ்டிகளும், போலீசாரும் வசூல்ல ஈடுபட்டிருக்காங்க. மின் கேபிள் திருட்டு பிரச்னையில போலீசார் அலட்சியமா இல்லாம இருந்திருந்தா, இப்ப இரு தரப்பு மோதலா மாறியிருக்காது, பலர் ஓடி ஒளியும் நிலையும் இருந்திருக்காது. இனியாவது உடுமலை சப்-டிவிஷன் போலீசார் கவனம் செலுத்தணும்னு, சொன்னாங்க.








      Dinamalar
      Follow us