ADDED : ஜன 27, 2026 05:04 AM
கோவை: கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் சார்பில், 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
* வேளாண் பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில், துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அவர் பேசுகையில், சுயசார்பு இந்தியா மற்றும் வந்தே மாதரம் 150 ஆண்டுகள் குறித்து விளக்கினார். இளம் தலைமுறையினருக்கு புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். பல்கலை அலுவலர்கள், துறைத்தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மதராஸ் வேளாண் மாணவர் கூட்டமைப்பு (மாசு) சார்பில் நடந்த விழாவில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு 'மாசு' தேர்தல் நடத்த உதவியாக இருந்த அதிகாரிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாசு தலைவர் செந்தில், செயலாளர் பூமிராஜ், பேராசிரியர்கள் பாலாஜி கண்ணன், மதராஸ் வேளாண் இதழ் முதன்மை ஆசிரியர் ராஜன்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* சின்னவேடம்பட்டி தொழிற்துறை சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்க தலைவர் தேவகுமார் கொடியேற்றினார். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.
* கோவை மாநகர வடக்கு மாவட்ட த.மா.கா., சார்பில், காந்திபுரத்தில் நடந்த விழாவில், மாநில பொது செயலாளர் வாசன் கொடியேற்றினார். மா.செ., செல்வராஜ், மாநில அமைப்பு செயலாளர் சிகாமணி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

