ADDED : மார் 19, 2026 07:57 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: கோரிக்கை மனுக்களை பெட்டியில் சேர்க்கும் படி, தாலுகா அலுவலகத்தில் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருவாய்த் துறையில், தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாலுகா அலுவலகத்தில் மிக குறைந்த அலுவலர்களே பணியில் உள்ளனர். இந்நிலையில், தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், மனுக்களுக்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் மாலையில் பெட்டி திறக்கப்பட்டு, அலுவலர்கள் மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வார்கள் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.
