/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பும் முகாம் கேட்டு கோரிக்கை
/
விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பும் முகாம் கேட்டு கோரிக்கை
விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பும் முகாம் கேட்டு கோரிக்கை
விடைத்தாள் திருத்தும் பணிக்கு விரும்பும் முகாம் கேட்டு கோரிக்கை
ADDED : மார் 17, 2025 12:34 AM
கோவை; முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரும்பும் விடைத்தாள் திருத்தும் முகாமில் பணியாற்றும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்ட தலைவர் முகமது காஜாமுகைதீன் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான தேர்வுகள், இன்னும் இரு வாரங்களில் முடிவுடைய உள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து, விடைத்தாள்கள் திருத்தும் முகாம் துவங்க உள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் வருவாய் மாவட்டத்தில் உள்ள விடைத்தாள் திருத்தும் முகாம்களில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பத்தின் அடிப்படையில், பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அது போல் இந்த ஆண்டும், கோவை மாவட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் விடைத்தாள் திருத்தும் முகாமில் பணியாற்றும் வகையில், முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.