ADDED : ஆக 25, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
உடுமலை: அமராவதி ஆற்றுப்பாலத்தில், தடுப்புச்சுவரை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
ஆனால், இப்பாலத்தின் தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, இப்பாலத்தில், சீரமைத்து புதுப்பிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
