தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில் வேகம் வேண்டுமென வேண்டுகோள்

 வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில் வேகம் வேண்டுமென வேண்டுகோள்

 வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில் வேகம் வேண்டுமென வேண்டுகோள்


ADDED : பிப் 25, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: முதல்வரின் வீடுகள் மறு கட்டுமானத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறையில் கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, தற்போது பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள வீடுகளை கண்டறிந்து, அவற்றை மீண்டும் கட்டித் தருவதே மறு கட்டுமான திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தின் கீழ், ஒரு வீட்டுக்கு 210 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட ரூ. 2.40 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 2025-2026 நிதியாண்டிற்கு ரூ. 98 கோடி நிதி முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 15,515 வீடுகளை மறுகட்டமைப்பு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இத்திட்ட பணிகளை முடிக்க நீண்ட நாட்கள் எடுத்து கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒதுக்கப்பட்ட வீடுகளில் 186 வீடுகளுக்கான பணிகள் முழுமையாக முடிந்துவிட்டன. இது கிட்டத்தட்ட 60 சதவீத பணியாகும். கூடுதலாக, 500 வீடுகளை மறுகட்டமைப்பு செய்ய அனுமதி கோரியுள்ளோம்.

இதுதவிர, சுவர்களில் விரிசல் உள்ள வீடுகளை பழுதுபார்க்க ரூ. 70 ஆயிரம் முதல் நிதி வழங்கி பணி செய்து வருகிறோம். பொதுவாக, ஒரு வீட்டை 90 நாட்களுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என்றனர்.

விண்ணப்பங்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், பணிகள் விரைவாகத் தொடங்கி முடிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், விண்ணப்பங்களை உரிய காலத்தில் பரிசீலனை செய்து, வீடுகளை விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us