/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதவி உயர்வு வாயிலாக நியமனங்கள் தக்க விதி திருத்தம் செய்ய கோரிக்கை
/
பதவி உயர்வு வாயிலாக நியமனங்கள் தக்க விதி திருத்தம் செய்ய கோரிக்கை
பதவி உயர்வு வாயிலாக நியமனங்கள் தக்க விதி திருத்தம் செய்ய கோரிக்கை
பதவி உயர்வு வாயிலாக நியமனங்கள் தக்க விதி திருத்தம் செய்ய கோரிக்கை
ADDED : டிச 16, 2024 11:00 PM
கோவை; தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம், நிறுவனர் தலைவர் சுப்ரமணியன் தலைமையில், ரயில்வே ஸ்டேஷன் எதிரே, தனியார் ஹோட்டலில் நடந்தது.
கூட்டத்தின் நிறைவில், '2023ம் ஆண்டு புதிய விதிகளின்படி பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுக்கொள்ள கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 13ம் தேதியன்று பணியில் உள்ளவர்களுக்கு மூன்று ஆண்டுகால அவகாசம் வழங்க, விதி, 397ன்படி தக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், வருவாய் அலுவலர் பதவிகளை விதி, 203, 204, 205ன் கீழ் சேர்த்தும், விதி, 206ன் படி அவற்றுக்கான நியமன அலகு, மாநில அலகு என, நிர்ணயித்து மாநில அளவிலான பணி மூப்பு நிர்ணயம் செய்து, கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர் பதவியிலிருந்து உரிய பதவி உயர்வுகளை வழங்க, தக்க விதித்திருத்தம் செய்ய வேண்டும்.
உதவி கமிஷனர்கள், நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், வருவாய் அலுவலர் ஆகிய பதவிகளில் இருந்தும் பதவி உயர்வு வாயிலாக நியமனம் செய்ய தக்க விதி திருத்தம் செய்து, நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோருக்கு உரிய பதவி உயர்வு வழங்க, அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.