/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிகளை தாங்கும் மின்கம்பங்கள் சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை
/
கொடிகளை தாங்கும் மின்கம்பங்கள் சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை
கொடிகளை தாங்கும் மின்கம்பங்கள் சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை
கொடிகளை தாங்கும் மின்கம்பங்கள் சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை
ADDED : பிப் 12, 2026 05:14 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில், ரோட்டோரம் இருக்கும் மின்கம்பங்களில் செடி, கொடிகள் வளர்ந்து, கம்பத்தை ஆக்கிரமித்துள்ளது.
இதில், கோவில்பாளையத்தில் இருந்து நெகமம் செல்லும் ரோட்டில் புதரின் நடுவே உள்ள மின்கம்பம் மற்றும் அதன் ஒயரில் கொடிகள் படர்ந்துள்ளது. இதே போன்று செங்குட்டைபாளையத்திலிருந்து குள்ளக்காபாளையம் செல்லும் வழியில், எம்.ஜி.ஆர். காலனியில் ரோட்டோர மின்கம்பத்தில் அதிகளவில் கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளது.
வகுத்தம்பாளையத்தில் உள்ள மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து காய்ந்தபடி காட்சியளிக்கிறது. மேலும், இந்த மின் கம்பத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதேபோன்று பல கிராமப்புறங்களில் மின்கம்பங்கள் காட்சியளிக்கிறது.
மேலும், மின்கம்பங்களோ அல்லது மின் ஒயர்களோ சேதமடைந்தால் அல்லது விபத்தினால் மாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டால், மின்பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மின் பழுது நீக்கக்கூட கம்பத்தில் ஏற முடியாத நிலை உள்ளது.
எனவே, மின்கம்பங்கள் நடப்பட்ட இடங்களில் இருக்கும் செடி, கொடிகள் மற்றும் மின் ஒயர்களை ஆக்கிரமித்த செடிகளை அகற்றம் செய்ய வேண்டும். மின்கம்பம் நடப்பட்ட இடத்தை சுற்றிலும் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

